ராமசாமி படையாட்சியார் மணி மண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

  அனிதா   | Last Modified : 25 Nov, 2019 01:20 pm
chief-minister-inaugurated-the-ramaswamy-mani-mandapam

சுதந்திரப்போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 

சுதந்திரப்போராட்ட வீரரான ராமசாமி படையாட்சியாருக்கு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று நண்பகல் 12.14 மணியளவில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வீரமணி, எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மணிமண்டபம் அருகே ராமசாமி படையாட்சியாரின் வெண்கலச் சிலையும், ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close