34வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி!

  அனிதா   | Last Modified : 26 Nov, 2019 01:33 pm
kallakkurichi-became-34th-district

தமிழகத்தின் 34வது மாவட்டமாக உதயமாகியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் கூடுதலாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 22ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவான தென்காசி மாவட்டத்தி நிர்வாக பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து இன்று விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு உருவாகியுள்ள புதிய மாவட்டத்தில், சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலை ஆகியவை தாலுக்காக்களாகவும், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகியவை வருவாய் கோட்டங்களாக செயல்படும். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close