திருச்சி: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா செடிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி

  அனிதா   | Last Modified : 26 Nov, 2019 03:03 pm
trichy-cannabis-plants-in-corporation-land

திருச்சியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கஞ்சா செடிகளை காவல்துறையினர் அகற்றினர். 

திருச்சி  மாநகராட்சிக்கு உட்பட்ட 50வது வார்டில், தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தை  மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், இப்பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி இடத்தில் கஞ்சா செடி வளர்ந்திருப்பதை பொதுமக்கள் இன்று பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கும், காவல் துறைக்கும் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நான்கு அடி உயரத்தில் வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை பிடுங்கி எறிந்தனர்.  

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close