அழகி பட்டம் வென்ற அதிமுக பெண் பிரமுகர்... அவதூறு பரப்பிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2019 02:49 pm
police-file-charges-of-4-person-for-defamation

மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் 2019 அழகி பட்டம் வென்ற அதிமுக பெண் பிரமுகரைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய புகாரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி வேலுமணி குறித்து தமிழ்ச் செய்தி என்ற இணைய வடிவத்தில் செய்தி வெளியாகியிருந்தது. மேலும் இந்த செய்தியில் "ஷாக் அடிக்குது சோனா ....நடந்து போனா.... அம்பலமாகும் அமைச்சரின் அந்தப்புரம்... அதிர்ச்சியில் கோவை அதிமுகவினர்" என பல அவதூறான வார்த்தைகள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து, தமிழ் செய்தி பத்திரிகையின் மாவட்ட செய்தியாளர் பாலகணேசன் கொடுத்த புகாரின் பேரிலும், சோனாலி பிரதீப் கொடுத்த புகாரின் பேரிலும் கோவை மாநகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

புகாரின் பேரில் அவதூறு பரப்பியதாக ஈரோடு மாவட்டம் 20வது வார்டு திமுக உறுப்பினர் ரகுபதி என்பவரை கைது செய்த போலீசார், அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சோனாலி பிரதீப் கொடுத்த புகாரின் பேரில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக சபீர் கான், ராஷ்யா அப்துல் வகாப், தளபதி படேல் மற்றும் ரகுபதி ரவி ஆகிய 4 பேர் மீது சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close