தவறி விழ இருந்த பயணியை காப்பாற்றிய காவலர்.. நீங்களே பாருங்க அந்த காட்சிய...

  அனிதா   | Last Modified : 29 Nov, 2019 10:59 am
the-guard-who-rescued-the-passenger-who-was-about-to-fall

கோவை மங்களூர் ரயிலில் இருந்து, தவறி விழ இருந்த பயணியை, பாத்திரமாக ஏற்றி விட்ட ரயில்வே தலைமை காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

கோவையில் இருந்து மங்களூர் செல்லும், கோவை - மங்களூர்  எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை கோவை ரயில் நிலையம் நடைமேடை எண் 3 ல் இருந்து, காலை 6.40 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட ரயிலில்  மங்களூர் செல்ல வந்த கனவன்,  மனைவி, மகன்  என ஒரு குடும்பத்தினர், ஓடும் ரயிலில் பைகளுடன் ஏற முயன்றனர். அப்போது மகன் மற்றும் கணவன் ஏறிய நிலையில், பைகளுடன் ஏற முயன்ற அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழும் வகையில் பின்நோக்கி வந்தார். இதை கண்ட ரயில்வே தலைமை காவலர் நொடி பொழுதில் சாதூரியமாக செயல்பட்டு அவரை தாங்கி பிடித்து, ரயில் பெட்டியினுள் அனுப்பி வைத்தார். 

இந்த காட்சிகள் ரயில் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை கண்ட கோவை ரயில் நிலைய இயக்குநர் துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலர் பாலகிருஷ்ணனுக்கு பாராட்டு தெரிவித்ததோடு சான்றிதழ் மற்றும் ரூ.500 வெகுமதி வழங்கி கவுரவித்தார். இவரது இந்த செயலுக்கு ரயில்வே ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close