‘மரங்களை வளர்ப்போம், மரங்களை காப்போம்’: மினி மாரத்தான் போட்டி

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2019 09:26 am
mini-marathon-competition-in-kovai

மரங்களை வளர்ப்போம், மரங்களை காப்போம் என்ற தலைப்பில் பொதுமக்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவை கே.பி.ஆர் நிறுவனங்களின் சார்பில் பொதுமக்களிடையே சமூகம் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்புகளில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. அதே போல் 6ஆவது ஆண்டாக இந்த ஆண்டு கோவை கணியூர் சுங்கசாவடி பகுதியில் பூமியில் உள்ள உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் மரங்களும், மரங்களில் இருந்து கிடைக்கும் சுத்தமான காற்று முக்கியம் என்பதை வலியுறுத்தி, மரங்களை வளர்ப்போம், மரங்களை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

இம்மாரத்தான் போட்டியை கல்லூரியின் முனைவர் அகிலா மற்றும் கருமத்தாம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். கணியூர் சுங்கசாவடியில் தொடங்கிய மினி மாரத்தான்  போட்டியானது 6 பிரிவுகளாக  5 கிலோ மீட்டர் 8 கிலோ மீட்டர் பிரிவில் நடைபெற்றது. இந்த போட்டியில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close