கனமழையால் 4 வீடுகள் இடிந்து விழுந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு?

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 08:30 am
4-houses-collapsed-due-to-heavy-rains-12-died

கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த நடூர் ஏடி காலனி பகுதியில் நேற்றிரவு கனமழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 4 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close