பேக்கரி கடைக்காரருக்கு பிளேடு வெட்டு... பொருட்களை சீக்கிரம் வழங்காததால் நேர்ந்த கொடூரம்..

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 08:48 am
blade-cutting-on-the-bakery-shop-owner

சென்னை பல்லாவரம் அருகே பேக்கரி கடைக்காரர்கள் பொருட்களை சீக்கிரம் வழங்காததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் பிளோடால் முகத்தில் கிழித்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராம் (25). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் கடைக்கு வந்த ஆதாம் நகர் பகுதியை சேர்ந்த குணசேகரன்(27) என்பவர் தனக்கு சீக்கிரம் பொருட்களை தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவரது கடையில் ஏற்கனவே நிறைய வாடிக்கையாளர்கள் நின்று கொண்டிருந்ததால், ஒவ்வொருவருக்காக தான் தர முடியும். விருப்பம் இருந்தால் நின்று வாங்குங்கள் இல்லையென்றால் வேறு கடைக்கு செல்லுங்கள் என மோகன்ராம் கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் ரகளையில் ஈடுபட்டதோடு, கடைக்காரர் மோகன் ராம் முகத்தில் பிளோடால் கிழித்து விட்டு தப்பியோடியுள்ளார். இது குறித்து தகவலறிந்த வந்த சங்கர் நகர் போலீசார், தப்பியோடிய குணசேகரனை தேடி வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close