கோவையில் சுவர் இடிந்து 3 வீடுகள் தரைமட்டம்: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 11:00 am
wall-collapsed-in-coimbatore

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியார் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் தரை மட்டமாகியுள்ளது. 17 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

மேட்டுப்பாளையம் அருகே நடூர் - ஏடிக்காலனி பகுதியிலுள்ள கண்ணப்ப நகரில் தனியாருக்கு சொந்தமான 20 அடி காம்பவுண்ட் சுவர் உள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக, சுவற்றின் உள்பகுதியில் நீர் தேங்கியதால் 20 அடி உயரமுள்ள சுவர் இன்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் 3 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இந்த இடிபாடுகளில் 18க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என கருதி பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2 குழந்தைகள், 12 பெண்கள், 5 ஆண்கள் உட்பட 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரே இரவில் 3 குடும்பங்களை சேர்ந்த 17 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close