செங்கல்பட்டு மிதக்குகிறது.! சென்னைக்கு ஆபத்தா?!

  அனிதா   | Last Modified : 03 Dec, 2019 09:58 am
flood-warning

செங்கல்பட்டு மிதக்குகிறது.! சென்னைக்கு ஆபத்தா?!

ரபிக்கடலில் நிலைகொண்டுள்ள 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் கிழக்கு திசை காற்றின் சாதகப்போக்கால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல இடங்களிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் சாலைகளில்  மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தென்னேரி ஏரி நிரம்பியுள்ளது. உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஏரிக்கரையையொட்டி உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் சென்னை மக்கள் பதற்றத்தில் உள்ளனர். சென்னைக்கு ஆபத்து ஏற்படுமோ என்கிற அச்சத்தில் இருக்கின்றனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close