சென்னை தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் உள்ள அலுவலகம் ஒன்றில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட தகவலாக தீ விபத்து ஏற்பட்டுள்ள தனியார் நிறுவன அலுலவகம் சேகர் ரெட்டி என்பவருக்கும் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதும் காரணங்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Newstm.in