2 வருஷ காதல்... முதலிரவு வேறொரு பெண்ணுடன்! அதிர்ச்சியில் காதலி!

  அனிதா   | Last Modified : 05 Dec, 2019 12:26 pm
young-man-arrested-for-cheating-a-young-girl

விழுப்புரம் மாவட்டம் தேவனூர் பகுதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (26). இவர் சென்னை கொளத்தூர் அருகே தங்கி, ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இதனிடையே கொளத்தூரை சேர்ந்த சகுந்தலா (29) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் எற்பட்டுள்ளது. இந்நிலையில் புண்ணியமூர்த்தி, சகுந்தலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பி சகுந்தலாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி புண்ணியமூர்த்தி அவரது சொந்த ஊருக்கு சென்ற போது, அங்கு உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக சகுந்தலாவுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சகுந்தலா, திருமணம் செய்வதாக கூறி பழகிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், காதலித்து பெண்ணை ஏமாற்றியது உறுதியானதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close