எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்! ஆவேசமான நயன்தாரா!

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 07:56 pm
darbar-audio-launch

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. முன்னதாக வெளியான சும்மா கிழி என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில்,  இன்று மாலை  நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடவுள்ள மற்ற பாடல்களை கேட்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது. கமல் 60 நிகழ்ச்சியில், திடீரென அரசியல் குறித்து புதுவிதமாக பேசியது தமிழக மக்களை சற்று உற்றுநோக்க வைத்துள்ளது. இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் என்ன பேச போகிறார்? என்ற பரபரப்பு ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்களுக்கும் உள்ளது. 

இதேபோல், சினிமாவில் நயன்தாராவுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. எனவே இந்நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்பாரா? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருந்தது. ஆனால், படத்தில் நயன்தாரா கலந்து கொள்ள போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே நடிப்பதோடு சரி வேறு எந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டுத் தான் நடிக்கிறார் நயன்தாரா.

ஏற்கனவே சம்பள பாக்கி இருப்பதாகக் கூறி தர்பார் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்புக்கே நயன்தாரா வரவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், என் கேரியரில் நான் செய்த மிகப் பெரிய தவறு முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் நடித்தது தான் என மீண்டும் சர்ச்சை எழும் வகையில் கூறியிருந்தார். முன்னதாக, தர்பார் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு முருகதாஸ் விரும்பிய நிலையில், ரஜினிகாந்த் நயன்தாராவை நடிக்க வைக்குமாறு கூறியதாக தகவல்கள் வெளியாகிருந்தது குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக நடந்த விஜய்யின் பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு இயக்குநர் அட்லி நயன்தாராவை அழைத்திருந்தார். ஆனால் நயன்தாரா வரவில்லை. அதேபோன்று தர்பார் பட இசை வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்து கொள்ள போவதில்லை என்று கூறப்படுகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close