வெங்காயத்தை தொடர்ந்து எகிறியது முருங்கைக்காய் விலை!

  முத்து   | Last Modified : 08 Dec, 2019 10:21 am
drumstick-and-onion-price

வெங்காய விலை கடுமையாக உயர்ந்து காணப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் முருங்கைக்காய் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. முருங்கைக்காய் விளைச்சல் பாதிப்பால் அதன் வருகை இல்லாததாலும் இன்று முகூர்த்த நாள் என்பதாலும் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி சந்தைகளில் ஒரு கிலோ முருங்கை ரூ.650 முதல் ரூ.800 ரூபாய் வரையும், மதுரை சந்தைகளில் கிலோ முருங்கைக்காய் ரூ.300 முதல் ரூ.350 வரையும் விற்பனையாகின்றது. வெங்காயத்தின் விலையை தொடர்ந்து முருங்கைக்காய் விலையும் உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close