அதிக பிரியாணி சாப்பிட்டால் பரிசு... ஊட்டி இளைஞர் முதலிடம்

  முத்து   | Last Modified : 08 Dec, 2019 11:16 am
biryani-eating-competition-in-chennai

சென்னை அண்ணாநகரில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. ஆவி பறக்கும் சிக்கன் பிரியாணியை போட்டி போட்டு வேகமாக சாப்பிட்டனர் போட்டியாளர்கள். இதில் ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள் சிலரும் இதில் பங்கேற்றனர். இரண்டு நிமிடங்களில் யார் அதிகளவில் பிரியாணி சாப்பிடுகிறார்கள் என்ற அடிப்படையில் முதல் சுற்றில் 33 தேர்வு செய்யப்பட்டனர். முதல் சுற்றிலேயே வயிறு ஃபுல் ஆனது. ஆனாலும் இரண்டாவது சுற்றில் களமிறங்கிய போட்டியாளர்கள் பிரியாணியை ஒரு கை பார்த்தனர். நாங்கள் தான் பிரியாணியை சாப்பிடுவதில் கில்லாடி என ஊட்டியைச் சேர்ந்த ராஷேஷ் என்பவர் 3 பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். அவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த தனுஷ்-க்கு ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close