தனியாக நீச்சல் கற்ற இளைஞர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்!

  முத்து   | Last Modified : 08 Dec, 2019 11:48 am
youth-drowned-well-water-and-dead

பெரம்லூர் மாவட்டம் பெண்ணங்குணம் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (19), தொழுதூரில் உள்ள மாமனார் தங்கவேல் என்பவரின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு தங்கவேலுக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் அவர்கள் குளித்துள்ளனர். அப்போது நீச்சல் தெரியாத ஆகாஷ் அதே கிணற்றில் இடுப்பில் கயிறு ஒன்றினை கட்டிக்கொண்டு நீச்சல் கற்றதாக கூறப்படுகிறது. அனைவரும் கிணற்றை விட்டு வெளியே வந்தபோது, ஆகாஷ் மட்டும் தனியாக நீச்சல் கற்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் ஆகாஷ் கிணற்றில் இல்லாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கிணற்றுக்குள் மூழ்கி காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் காப்பாற்ற முடியவில்லை. இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த திட்டக்குடி தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி நீண்ட நேரத்திற்கு பிறகு ஆகாஷ் உடலை மீட்டனர். உறவினர் வீட்டிற்கு சென்று நீச்சல் பழக முயன்ற இளைஞர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close