திருச்சி வந்தடைந்த எகிப்து வெங்காயம்.. விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி..

  அனிதா   | Last Modified : 09 Dec, 2019 11:52 am
egypt-onions-arrived-in-trichy

வெங்காய உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இந்த ஆண்டு கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவமழையால் வெங்காய பயிர்கள் அழிந்தன. இதனால் நாடு முழுவதும் பெரிய வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெங்காய தட்டுப்பாட்டை நீக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. 

தற்போது மத்திய அரசு எகிப்து, துபாய் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து வருகிறது. முதற்கட்டமாக எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் பெரிய வெங்காயம் திருச்சி பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டியை வந்தடைந்தது. மும்பை கடல் வழியாக கொண்டு வரப்பட்டு பின்னர் சாலை மார்க்கமாக திருச்சி வந்தடைந்தது.  இதனால், ஒரு கிலோ வெங்காயம் ரூ.150 முதல் 200 வரை விற்கபட்டு வந்த நிலையில், வெங்காய இறக்குமதியால், ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close