அந்தரங்க வீடியோவால் கொலை செய்த இளம்பெண்!

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 03:49 pm
sexual-torture-women-killed-her-sister-s-husband

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (வயது 30). இவருக்கு நிரஞ்சனா (23) என்ற பெண்ணுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 அழகான பெண் குழந்தைகள் உள்ளது. பாண்டீஸ்வரனின் அக்காள் ராஜேசுவரி (33). அவரது கணவர் மணிகண்டன் (30). வாழை இலை வியாபாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மணிகண்டன் குடும்பத்துடன் பக்கத்து கிராமமான ஒத்தபட்டியில் வசித்து வந்தார்.

மணிகண்டன், உறவினர் என்பதால் பாண்டீஸ்வரனின் மனைவி நிரஞ்சனாவை அடிக்கடி நேரில் வந்து பார்ப்பதும், செல்போனில் பேசுவதுமாக இருந்துள்ளார். இதற்கிடையே 2 பேரும் தனியாக அவ்வப்போது பேசி வந்ததை, அவர்களது உறவினர்கள் பார்த்து இருவரையும் கண்டித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக பாண்டீஸ்வரனுக்கும், நிரஞ்சனாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் மணிகண்டன் வீட்டிலும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மணிகண்டன் தனது குடும்பத்துடன், ஒத்தப்பட்டியில் இருந்து ராயப்பன்பட்டியில் உள்ல லூர்துநகருக்கு குடியேறினார். 

இந்நிலையில் மணிகண்டன் மீண்டும் நிரஞ்சனாவிடம் செல்போனில் பேசி தொந்தரவு செய்துள்ளார். மேலும் சம்பவத்தன்று பாண்டீஸ்வரன் வேலை தொடர்பாக வெளியூர் சென்றிருந்த வேளையில், அவரது வீட்டிற்கு சென்ற மணிகண்டன், நிரஞ்சனாவிடம் பேச்சு கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு தெரியாமல் டீயில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்து விட்டு, அவருடன் ஆபாசமாகவும், செக்ஸ் தொடர்பாக அந்தரங்கமாகவும் பேசி அதனை மணிகண்டன் செல்போனில் பதிவு செய்துள்ளார். அந்த செல்போன் பதிவை, தனது நண்பர்களிடம் போட்டுக் காண்பித்துள்ளார்.

இதுதவிர நிரஞ்சனா குறித்து அவதூறாக பேசி வந்ததுடன், அடிக்கடி அவருக்கு மணிகண்டன் செல்போனில் தொடர்பு கொண்டு, ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் பரவ செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார். மேலும் செல்போன் மூலம் பேசி அடிக்கடி செக்ஸ் தொல்லைகளையும் தொடர்ந்து  கொடுத்துள்ளார். இந்த விஷயம் பாண்டீஸ்வரனுக்கு தெரிய வரவே அவர்களது குடும்பத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை மணிகண்டன் பேசியது தொடர்பாக பாண்டீஸ்வரனுக்கும், நிரஞ்சனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செல்போனில் பேசியது உண்மையா என்பதை மணிகண்டனிடம் நேரில் சென்று கேட்கலாம் என்று முடிவு செய்து கணவன், மனைவி இருவரும் பெருமாள்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணிகண்டன் இருக்கும் ராயப்பன்பட்டிக்கு சென்றனர். அங்கு சண்முகாநதி அணைக்கு செல்லும் சாலையில் மணிகண்டன், அவரது மனைவி ராஜேஸ்வரியும் வாழை இலை அறுப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பாண்டீஸ்வரன் மறித்து, செல்போனில் பேசியது குறித்து கேட்டார்.


அவர்கள் இடையே இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, திடீரென்று நிரஞ்சனா மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த ராஜேஸ்வரிக்கும் வெட்டு விழுந்தது. அப்போது பாண்டீஸ்வரன், நிரஞ்சனாவிடம் இருந்த அரிவாளை பறித்து, அவரும் மணிகண்டனை வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்து போனார். பின்னர் கணவனும், மனைவியும் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வழக்குப் பதிவு செய்து பாண்டீஸ்வரன், நிரஞ்சனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close