எல்லோருக்கும் வடை இலவசம்! லட்சக்கணக்கில் சம்பள வேலையை உதறிய மகன்! நெகிழ வைக்கும் காரணம்!

  அனிதா   | Last Modified : 09 Dec, 2019 01:50 pm
vada-free-for-all-customers

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னால், சாதாரணமாக தெருவில் வடைகளைச் சுட்டு விற்பனை செய்யத் துவங்கியது தான் சிதம்பரத்தில் இருக்கும் சண்முக விலாஸ் ஸ்வீட் கடை.  வடையின் தரமும், சுவையும் வாடிக்கையாளர்களிடையே பெரும் ஆதரவைத் திரட்டித் தர தற்போது பிரம்மாண்டமாக ஓங்கி வளர்ந்துள்ளது. 

சிதம்பரத்தில் யாரைக் கேட்டாலும் சண்முக விலாஸ் கடையைக் காட்டும் அளவிற்கு வாடிக்கையாளர்களிடையே பெரும் பெயரும் கிடைத்திருக்கிறது. எழுபதாவது வருட துவக்கத்தைக் கொண்டாடும் விதமாக, சண்முக விலாஸ்  கடையின் நிறுவனரின் நினைவு நாளையொட்டி அன்றைய தினம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே இலவசமாக வடையை வழங்கி வடை தினம் என்று புதிதாய் உருவாக்கி இருக்கிறார்கள்.  அன்றைய தினம் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் நெகிழ்ச்சியுடன் வடையை வாங்கிக் கொண்டு வாழ்த்திச் சென்றார்கள். 

அப்பாவின் உழைப்பால் உருவான கடையை ஏற்று நடத்த வேண்டும் என்று லட்சக்கணக்கில் வாங்கிய சம்பளத்தை உதறி விட்டு தற்போது கடையை கவனித்து வருகிறார் அவரது மகன் கணேஷ். இனி ஒவ்வொரு வருஷமும் தந்தையின் நினைவு தினமான டிசம்பர் 1 தேதி வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே இலவசமாக வடை தருவது என்று முடிவெடுத்திருக்கிறார் கணேஷ்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close