கொசுவை விரட்ட இப்படியா செய்வது? - தீயில் கருகி மூதாட்டி, 15 ஆடுகள் பலி

  முத்து   | Last Modified : 10 Dec, 2019 07:40 am
fire-old-woman-death

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆட்டுக்கொட்டகையில் கொசுவை விரட்ட புகைமூட்டம் போட்டதில் ஓலையில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகை தீப்பிடித்து எரிந்து மூதாட்டி உயிரிழந்தார். மேலும் கொட்டகையில் கட்டியிருந்த 15 ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன.   
வேதாரண்யம் அருகே அண்டர்காடு வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சம்மாள்(78). இவர் 15 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்று மாலை வீட்டுக்கு அருகில் உள்ள ஆட்டு கொட்டகையில் ஆடுகளை கட்டிவிட்டு கொசுவை விரட்ட புகை மூட்டம் போட்டுள்ளார்  

பின்னர் சிறிது நேரத்தில் எதிர்பாராத விதமாக புகை மூட்டத்திலிருந்து தீ பரவி ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதில் ஆட்டுக் கொட்டகைக்குள் இருந்த மூதாட்டி அஞ்சம்மாள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆட்டுக் கொட்டகையில் கட்டியிருந்த 15 ஆடுகளும் தீயில் கருகி இறந்தன.  இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பிய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close