மாணவர் தற்கொலை..! பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்!

  முத்து   | Last Modified : 10 Dec, 2019 12:06 pm
kanchipuram-school-student-student

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் . இவருடைய இரண்டாவது மகன் மணிமாறன் (15) அப்பகுதியில் உள்ளஅரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மணிமாறன் நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது மாணவன்  பாட நோட் புத்தகத்தை எடுத்துவரவில்லை என ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அதனை எடுத்து வர சொல்லி மாணவரை ஆசிரியை வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவர் மணிமாறன் வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். வீட்டில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். 
பின்னர் ஆத்திரம் அடைந்த மாணவனின் உறவினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியரின் நடவடிக்கையே மாணவர் தற்கொலைக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close