5வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்..

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 06:26 pm
8-month-old-baby-slipping-off-the-5th-floor

சென்னை தங்கசாலை பகுதியில் வசித்து வருபவர் மெய்பால். இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு நீலம் என்ற மனைவியும்,  திநிஷா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், மெய்பால் தொழில் விஷயமாக பெங்களூரு சென்றுவிட்டார். வீட்டில் நீலம் தனது குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார். நேற்று மாலை நீலம் சமைத்து கொண்டிருந்தபோது, குழந்தை தவழ்ந்து பால்கனிக்கு வந்துள்ளது. அங்கு விளையாடி கொண்டிருந்த திநிஷா திடிரென 5வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்தார். 

அதிர்ஷடவசமாக குழந்தை கீழே நிறுத் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருக்கையில் விழுந்ததால், காலில் லேசான காயத்துடன் உயிர் தப்பியது. அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து ஓடி சென்று குழந்தையை மீட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்களின் சத்தம் கேட்டு நீலம் வெளியே வந்தபோது குழந்தை தவறி விழுந்தது தெரியவந்தது. பின்னர் குழந்தையை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து, யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை யாராவது பால்கனியில் இருந்து தூக்கி வீசினார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close