ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் சிறுவனைக் கொன்ற நண்பர்கள்...

  முத்து   | Last Modified : 11 Dec, 2019 06:44 am
trichy-child-murdered-friends

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் பகுதியில் ஓரினச் சேர்க்கைக்கு பாலியல் உறவுக்கு ஒத்து வராதததால் 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய அவலம் நிகழ்ந்துள்ளது.

திருச்சி அரியமங்கலம், மேல அம்பிகாபுரம் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அலியார் என்பவரின்  மகன் அப்துல். 5ஆம் வகுப்பு படித்து வரும் இவர் கடந்த 3ஆம் தேதி முதல் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.தனது மகனைக் காணவில்லை என்பது குறித்து அலியார், அரியமங்கலம் காவல் துறையினரிடம் கடந்த 6ஆம் தேதி புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், அப்துல் அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சேகரின் மகன் இளவரசன் உள்ளிட்ட சிலருடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. 

இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் இளவரசன், சரவணன், லோகேஷ், வீராச்சாமி உள்ளிட்டோரிடம் அரியமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்துலை, இளவரசனும், இன்னும் சிலரும் சேர்ந்து ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.தொடர்ந்து வற்புறுத்தியபோதும் சிறுவன் அப்துல், ஓரினச் சேர்க்கைக்கு ஒத்து வரவில்லை எனக் கூறப்படுகிறது. சிறுவன் அப்துல் தனது இச்சைக்கு ஒத்துவராததை ஏற்க முடியாத இளவரசனும் அவனது கூட்டாளிகளும் கடும் கோபமடைந்துள்ளனர். தொடர்ந்து சிறுவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் சிக்கிய சிறுவன் அப்துல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து அப்துல் உடலை அப்பகுதியிலிருக்கும் குப்பைத் தொட்டி ஒன்றில் தூக்கி வீசியுள்ளனர். அவர்களுடன் சென்ற காவல்துறையினர் குப்பைத் தொட்டி அருகே கண்ட அப்துல் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close