கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண்! வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்!

  முத்து   | Last Modified : 11 Dec, 2019 07:40 pm
mother-child-suicide

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மோசூரை சேர்ந்த சதீஷ், சென்னை மாநகர போக்குவரத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். சதீஷ்- ரம்யா தம்பதிக்கு ஒன்றரை வயதில் அஸ்வதி என்ற பெண் குழந்தை உள்ளது. 

ரம்யாவுக்கு திருமணம் ஆகும் போது 25 சவரன் நகை போட்டுவந்த நிலையில், சதீஷ் குடும்பத்தினர் கூடுதலாக 3 சவரன் நகை கேட்டு தொடர்ந்து ரம்யாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து தனது தாயிடம் செல்போனில் பேசி அழுத்ததாகவும் தெரிகிறது. அதன் பிறகு நேற்று(டிச.10) வீட்டில் யாரும் இல்லாதப் போது தனியாக இருந்த ரம்யா தனது குழந்தையை மார்பில் அணைத்தவாறு ஒரே கயிற்றில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

வெளியில் சென்று வீடு திரும்பிய சதீஷின் பெற்றோர் கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகித்து உறவினர்களுடன் கதவை உடைத்து உள்ளே வந்து பார்த்துள்ளனர். அப்போது தாய், குழந்தை இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர், அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close