போதையால் திசைமாறிய கார் விபத்து.. தூக்கி வீசியதில் 3 பேர் படுகாயம்

  முத்து   | Last Modified : 12 Dec, 2019 08:59 am
car-in-wrong-way-hits-two-wheeler

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையில் வேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயமடைந்தார். 
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள பெண்ணங்கூர் கிராமத்தில், சாலையின் இடது புறம் சென்று கொண்டிருந்த கார் திடீரென வலது புறமாக சென்றது. அப்போது எதிரே வந்துகொண்டிருந்த இருசக்கரவாகனங்களின் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கரவாகனங்களில் சென்ற 3 பேர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். 

இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காட்சிகள் அங்கிருந்த பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது. ஒகேனக்கல் பகுதியிலிருந்து காரில் குடிபோதையில் வந்த நபர்கள்தான் விபத்தை ஏற்படுத்தி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் விபத்து தொடர்பாகவும் விபத்து ஏற்படுத்தியவர்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close