லிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை

  முத்து   | Last Modified : 12 Dec, 2019 11:08 am
arrest-child-porn-video-share

காவல்துறையினர் எச்சரிக்கையையும் மீறி குழந்தைகளின் ஆபாச படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்ததாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையதளங்களில் பார்த்தாலோ அல்லது வீடியோக்களை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தால் குற்றம் எனவும் கைது செய்யப்படுவர் எனவும் காவல்துறை எச்சரித்திருந்தது. மேலும் இது தொடர்பான பட்டியல் தயார் செய்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், சமூகவலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படத்தை பகிர்ந்ததாக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் வாட்ஸ்ஆப் மூலமாக குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்ததாக புகார் கூறப்படுகிறது. மேலும் பேஸ்புக் பக்கத்திலும் ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளார்.  பேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக சுமார் 15 பேருக்கு குழந்தைகளின் ஆபாச படங்களை அனுப்பியதாகவும் இதன் அடிப்படையில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close