2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது

  முத்து   | Last Modified : 12 Dec, 2019 11:41 am
retired-headmaster-kills-wife

விழுப்புரத்தில் இரண்டாவது மனைவியின் மீதான காதல் காரணமாக முதல் மனைவியை எரித்துக் கொன்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செய்யப்பட்டார். 
விழுப்புரம், சுதாகா் நகரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான நடராஜனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவரது முதல் மனைவி இந்திரா வீட்டில் மர்மமான முறையில் எரித்துகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பாக நடராஜன் அளித்த புகாரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்திரா வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால், பணம் கொடுக்கல் வாங்கல் காரணமா கொலை நிகழ்ந்திருக்கலாம் என பல கோணங்களில் விசாரணை நடத்தினர். 

எதிலும் உறுதியான தடயங்கள் சிக்காத நிலையில் இந்திராவின் கணவர் நடராஜனின் நடவடிக்கையில் காவல்துறையினர் சந்தேகமடைந்தனர். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் இந்திராவை அவரது கணவர் நடராஜனே கொலை செய்தது தெரிய வந்தது. தனது இரண்டாது மனைவி லீலா மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக, நடராஜன் முதல் மனைவி இந்திராவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த நடராஜன், வீட்டில் அவரை தாக்கிவிட்டு எரித்துகொன்றது விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.இதனையடுத்து நாடகமாடிய இந்திராவின் கணவர் நடராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close