காதலனுடன் ஓடிய மகள்! அவமானத்தில் பெற்றோர் செஞ்ச வேலை...!

  அனிதா   | Last Modified : 13 Dec, 2019 01:11 pm
parent-suicide-attempt-father-died

திருமணம் நிச்சயம் ஆன பிறகு காதலனுடன் மகள் ஓடியதால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருள் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (48), இவரது மனைவி சண்முகசுந்தரி (37). இவர்களது மகளுக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி அவரது தாய் மாமவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் கல்யாணம் நடைபெற இருந்ததையொட்டி திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், அவரது மகள் வீட்டை விட்டு ஓடி காதனுடன் கடந்த 4ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த பெற்றோர், கடந்த 6ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 

இருவரும் மயக்கமடைந்த நிலையில் வீட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சண்முக சுந்தரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால், அவரது கணவர் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close