நெடுஞ்சாலைகளில் காட்டு யானை! பயத்தில் பைக்குடன் கீழே விழுந்த வாலிபர்கள்!

  அனிதா   | Last Modified : 13 Dec, 2019 06:41 pm
wild-elephant-in-national-highway

கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வபோது வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருவது வழக்கமாக உள்ளது. அதிலும் குறிப்பாக காட்டு யானைகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. இதனால் வனத்துறை அதிகாரிகள் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அவ்வபோது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டூ மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனைச் சாவடி அருகே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒற்றை காட்டு யானை ஹாயாக வீர நடைபோட்டுச் சுற்றிக் கொண்டிருந்துள்ளது. இதை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதில் ஒரு வாகன ஓட்டி யானையை பார்த்த அச்சத்தில் பைக்குடன் கீழே விழுந்தார். இதை கண்டு பின்னால் வந்த லாரி ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

மேலும், கீழே விழுந்த வாலிபர்களை யானை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் இருந்த நிலையில், அவர்களை ஏதும் செய்யாமல் ஹாயாக நடந்து சென்றது.  இதனால், அந்த நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Elephant from Update News 360 on Vimeo.

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close