தினமும் அரசு பேருந்தில் மதுபாட்டில் கடத்திய நடந்துனர்!

  அனிதா   | Last Modified : 13 Dec, 2019 06:51 pm
trafficking-in-state-bus

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்துவதை தடுக்க தமிழக காவல்துறையினர் மற்றும் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேளாங்கண்ணியில் இருந்து தூத்துக்குடி வழியாக திசையன்விளை செல்லும் அரசு பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மீகா தலைமையிலான போலீசார் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்துக்கு வந்த அரசு பேருந்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த பஸ்சில் இருந்த முதலுதவி மருந்துகள் மற்றும் வாகனம் பழுது நீக்கும் உபகரணங்கள் வைக்கக் கூடிய பெட்டியில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் 20 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுபாட்டில்களையும் பேருந்தையும் பறிமுதல் செய்த போலீசார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணையில், ராதாபுரம்  அரசு பேருந்து நடத்துனர் ஜெயக்குமார்(42) என்பவர் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், அவர் ஊரில் உள்ள கடையில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close