பள்ளியில் இருந்து மாணவியை அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு..

  முத்து   | Last Modified : 14 Dec, 2019 09:42 am
school-girl-was-sexually-abused-a-relative

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 11 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துவருகிறார். மாணவி பள்ளியில் வகுப்பில் இருந்தப்போது சிறுமியின் உறவினர் வினோத்குமார்  என்ற இளைஞர் திடீரென பள்ளிக்கு வந்தார். அப்போது தலைமை ஆசிரியரிடம் சென்று மாணவியின் தந்தைக்கு அடிபட்டுவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். இதை நம்பிய தலைமை ஆசிரியரும் வகுப்பறையில் இருந்த மாணவியை அந்த இளைஞருடன் அனுப்பிவைத்தார். அதன்பின்னர் மாணவியின் தந்தைக்கு ஆறுதல் கூற செல்போன் மூலம் தலைமை ஆசிரியர் தொடர்பு கொண்டார். மாணவியை அழைத்துச்சென்றது தொடர்பாக தலைமை ஆசிரியர் கூறியப்போது, தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறிய தந்தை அச்சத்துடன் மகளை தேடிஓடினார். 

அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மாணவியை மிரட்டி வினோத்குமார் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை கண்ட உறவினர்கள் ஆத்திரத்தில், வினோத்குமாரை அடித்து உதைத்தனர். காயமடைந்த அவர் சிகிச்சைக்காக குடியாத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத்குமார் மீது குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸார், 'போக்ஸோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close