தமிழகத்தில் தொடரும் மழை! பள்ளிகளுக்கு விடுமுறையா?

  அனிதா   | Last Modified : 15 Dec, 2019 05:16 pm
rain-will-continue-for-7-days-in-tn

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் திரு.புவியரசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்‍கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர், சேலம், ராமநாதபுரம், தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மிதமானது முதல் கனமான மழைக்‍கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தற்போது அரையாண்டு தேர்வுகள் நடைப்பெற்று வருகின்ற காரணத்தினால், தொடரும் மழையினால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? அப்படி மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டால், திங்களன்று எந்த பாடத்திற்கான தேர்வுகள் நடைப்பெறும் என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுவரையில், எந்த பாடத்திற்கான தேர்வுகள் என்பது குறித்து தெளிவான எந்தவொரு அறிக்கையில் பள்ளிக்கல்வி துறையினரிடம் இருந்து வெளியாகவில்லை. மழை தொடரும் பட்சத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியானால் உதவியாய் இருக்கும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close