லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை! போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்!

  அனிதா   | Last Modified : 14 Dec, 2019 06:52 pm
villupuram-arun-s-suicide-is-not-of-lottery-tickets

லாட்டரி சீட்டு மோகம், தொழில் நஷ்டம், கடன் நெருக்கடி காரணமாக விழுப்புரத்தைச் சேர்ந்த அருண் தனது பெண் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் கூறுகையில், அருணுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கடன் வாங்கி வட்டிக்கு விடும் வேலையையும் செய்து வந்துள்ளார். அதிலும் அவருக்குச் சரியான வருவாய் இல்லை. தன்னுடைய வீட்டை விற்று கடனை அடைக்க முயன்றுள்ளார். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க கணினிமய லாட்டரி சீட்டுகளை வாங்கியதில் அதிலும் நஷ்டம் அடைந்துள்ளார். இந்த காரணங்களால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அருண் இறப்பதற்கு லாட்டரி சீட்டு மட்டுமே காரணம் கிடையாது” என்றார்.

மேலும், “இந்த ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக 200வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், 155 நபர்களை லாட்டரி விற்பனைக்காகக் கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், லாட்டரி விற்பனைக்கு காவல் துறையினர் உதவியாக இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வாரம் லாட்டரி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய இரண்டு ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
“கடலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 291 பேர் இந்த ஆண்டில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று மாவட்ட எஸ்.பி அபிநவ் தெரிவித்துள்ளார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close