லாட்டரி விற்பனைக்கு உடந்தை.. 3 காவலர்கள் மீது நடவடிக்கை

  முத்து   | Last Modified : 15 Dec, 2019 12:29 pm
vluppuram-sp-action-3-police-on-lottery-issueaction-3-police-on-lottery-issue

விழுப்புரத்தில் சட்டவிரோத 3 நம்பர் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த 3 காவலர்கள், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் சித்தேரிக்கரையை சேர்ந்த நகைப்பட்டறை தொழிலாளி அருண், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டால் ஏற்பட்ட கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்க தவறிய காவலர்கள் செல்வம், விஜயா, எழிலரசி ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். மேலும் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close