ஜெராக்ஸ் எடுக்க வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. கடை உரிமையாளர் கைது

  முத்து   | Last Modified : 15 Dec, 2019 10:27 am
single-man-arrested-pocso-act-for-sexually-harassing-school-girls

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஜெராக்ஸ் எடுக்க வரும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடை  உரிமையாளரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

மணப்பாறை அருகேயுள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அங்குள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்று வருவர். அவ்வாறு வரும் மாணவிகளுக்கு அந்த கடையின் உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகார் அடிப்படையில், ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் சண்முகசுந்தரம் (52) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் சண்முகசுந்தரம் ஜெராக்ஸ் எடுக்க செல்லும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து சண்முகசுந்தரம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close