சிறுமி பாலியல் வன்கொடுமை..! முதியவரை புரட்டி எடுத்த உறவினர்கள்

  முத்து   | Last Modified : 17 Dec, 2019 12:16 pm
old-man-rape-school-girl-in-madurai

மதுரையில், முதியவர் ஒருவரால் 5ஆம் வகுப்பு மாணவி  பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருப்பது அப்பகுதி மக்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பெற்றோரை இழந்த 10 வயது சிறுமி ஒருவர் தனது தாத்தா - பாட்டியிடம் வசித்து வந்தார். 5ஆம் வகுப்பு படிக்கும் இச்சிறுமி, தான் வசிக்கும் பகுதியில் உள்ள கடைக்கு மற்றும் பள்ளிக்கு சென்று வரக்கூடிய வேலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அடிக்கடி சிறு, சிறு உணவு பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அந்தச்  சிறுமியை அவரது தாத்தா மற்றும் உறவினர்கள் ஹாஸ்டலில் சேர்ப்பதற்காக சென்ற போது, அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 

அப்போது மருத்துவர்கள் சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடைபெற்றதாக கூறியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து அந்த 10 வயது சிறுமியிடம் உறவினர்கள் கேட்டப்போது உண்மையை கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், கிராம மக்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை பிடித்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்துறையினர் முதியவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து முதியவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close