11ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பூசாரி! டி.வி.யால் நேர்ந்த கொடூரம்!

  Ramesh   | Last Modified : 19 Dec, 2019 05:16 pm
old-priest-rape-a-minor-girl

தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி அருகில் இருக்கும் முடிவைத்தானேந்தல் கோவிலுக்கு அடிக்கடி சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளார். அந்த கோவிலில் அப்பகுதியைச் சேந்த ராஜு (50) என்பவர் பகுதி நேரமாக பூசாரியாக இருந்து வந்துள்ளார். இவர் கோயிலில் பூஜை வேலைகளை செய்யும் நேரம்போக மீதமுள்ள நேரத்தில் டிவி சர்வீஸ் செய்வார். சிறுமியின் வீட்டில் டி.வி இல்லாததால் அவர் கோவிலுக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் பூசாரி ராஜுவின் வீட்டிற்கு சென்று டி.வி பார்ப்பது வழக்கம். அப்போது ஒருநாள் ராஜு மாணவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து விட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமிக்கு இந்த விஷயம் தெரிய வர, இதனை யாரிடமும் சொல்லக் கூடாது இல்லையேல் உன் படிப்பு கெட்டு விடும் என்றெல்லாம் கூறி தப்பித்துள்ளார். இதற்கு பிறகும் மாணவியை அழைத்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .

இதன் விளைவாக சிறுமி கர்ப்பமாகி வயிறு பெருசாகிக்கொண்டே சென்றுள்ளது. ஆனால் பெற்றோர்க்கு உண்மை தெரியாததால் பல்வேறு வயித்து வலி மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளனர். இந்த நிலையில் சிறுமிக்கு வயிற்றுப்போக்கு அதிகமாகி 6 மாத சிசு வீட்டிலேயே இறந்து பிறந்தது. பெரும் அதிர்ச்சியான சிறுமியின் பெற்றோர் யாருக்கும் தெரியாமல் இறந்த சிசுவின் உடலை வீட்டிற்கு பின்புறம் புதைத்து விட்டனர். எனினும் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் பரவ கோவில்பட்டி காவல்துறையினருக்கும் தகவல் சென்றது. இதனையடுத்து பூசாரி ராஜூவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுமியை பூசாரி கர்ப்பமாக்கிய நிகழ்வு அப்பகுதி மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close