காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழப்பு.. பெண்ணின் சகோதரர் என்ன செய்தார்?   

  முத்து   | Last Modified : 20 Dec, 2019 09:27 am
death-of-building-worker

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள ஏலகிரியான் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி மாணிக்கவேல். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பெண்ணின் சகோதரர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 

இந்நிலையில் மாணிக்கவேல் இரவு வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர் தேடி உள்ளனர். பின்னர் எர்ரம்பட்டி அருகே இருந்த விவசாய நிலத்தில் உள்ள மின் மோட்டார் அறையில் மாணிக்கவேல் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த அதியமான்கோட்டை காவல்துறையினர் மாணிக்கவேல் வயிற்று வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கு மாணிக்கவேலின் உறவினர்கள், மாணிக்கவேல் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார் எனவும், காவல்துறையினர் முழு விசாரணை செய்யாமலே தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளது என குற்றம் சாட்டினர். இந்நிலையில் மாணிக்கவேல் காதலித்து வந்த பெண்ணின் சகோதரர் தான் கொலை செய்திருக்க வேண்டும். அவர் தங்கள் வீட்டிற்கே வந்து மிரட்டி சென்றதாகவும் மாணிக்கவேல் குடும்பத்தினர் கூறுகின்றனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close