4 மாவட்டங்களில் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை!

  அனிதா   | Last Modified : 20 Dec, 2019 01:40 pm
the-chance-of-rain-in-tamil-nadu

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல்:- "தென் தமிழக மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சொல்லக்கூடிய அளவிற்கு எங்கும் மழை பதிவாகவில்லை. வடகடலோர சென்னை பகுதி மற்றும் புதுவையில் தரைக்காற்று இன்று பலமாக வீசக்கூடும். 

அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடாவில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்புகள் பெரிதாக இல்லை. அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close