6 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

  சாரா   | Last Modified : 23 Dec, 2019 04:19 pm
weather-forecast-for-tn

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழகம். புதுவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 


குமரி கடல் பகுதியில் காற்று மணிக்கு  45 லிருந்து 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close