உள்ளாட்சி தேர்தல்.. 15 லட்சம் ரூபாய்க்கு மதுபாட்டில்கள் கடத்தல்!

  முத்து   | Last Modified : 27 Dec, 2019 04:35 pm
15-lakh-worth-liquor-seized

நாகை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 15 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கடத்தப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு லாரி மூலம் மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக நாகை மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், வாழ்மங்களம் சோதனை சாவடியில் நிற்காமல் சென்ற லாரியை, ஏனங்குடி அருகே துரத்திப் பிடித்தனர். அப்போது, லாரியை விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடினார். பின்னர், லாரியில் சோதனை செய்தபோது,  15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டிகள் இருந்தது தெரியவந்தது. உள்ளாட்சித் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்களை மகிழ்விக்க புதுச்சேரியில் இருந்து மதுப்பாட்டில்கள் வாங்கிவரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close