வேகமாக செல்வதில் போட்டி.. சிசிடிவியில் பதிவான பதற வைக்கும் விபத்து காட்சி..!

  முத்து   | Last Modified : 28 Dec, 2019 08:42 am
two-wheeler-crashed-road-cctv-footage

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சிகள், காண்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. தேன்கனிக்கோட்டை அருகே பெண்ணாங்கூர் என்ற இடத்தில், பேருந்தை முந்திச் செல்ல முயன்ற இரு சக்கர வாகனம் மீது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனங்களில் பயணித்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் பாஞ்சாலியைச் சேர்ந்த மோகன் என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேர் தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close