என்கவுன்ட்டர் செய்ய திட்டம்.. கதறும் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இளைஞர் 

  முத்து   | Last Modified : 28 Dec, 2019 09:37 am
child-sexual-harassment-case-accused-video-leaked

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள பூங்காவில் கடந்த மாதம் 26ஆம் தேதி 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர்  தனது நண்பருடன் அங்குள்ள பூங்காவில் பிறந்தநாள் கொண்டாட சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஆறுபேர் கொண்ட கும்பல்  அந்த இளைஞரை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதை வீடியோவாக எடுத்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்து புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி, பப்ஸ் கார்த்திக் ஆகிய ஆறு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தவர். தற்போது இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் இருக்கும் மணிகண்டன்  சரணடைவதற்கு முன்பு பேசிய வீடியோ ஒன்றன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், போலீசார்  என்னை என்கவுன்ட்டர் செய்யப்போவதாக மிரட்டுகிறார்கள். அதனால் சரணடையப் பயமாக இருக்கிறது என கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தாலே உண்மை தெரியும். இதில் சிலர் பேர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். என்கவுண்டர் செய்யும் அளவுக்கு நான் பெரிய தப்பு பண்ணவில்லை என்றும் அதில் கூறியுள்ளார். எனினும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close