வாக்களித்துவிட்டு திரும்பிய தந்தை, மகனுக்கு நேர்ந்த சோகம்..

  முத்து   | Last Modified : 28 Dec, 2019 11:03 am
accident-in-father-son-died-on-the-spot

திண்டுக்கல்லில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பியபோது சாலை விபத்தில் சிக்கி தந்தை மகன் பலியாகினர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி வயது 60. இவரது மகன் மோகன் (25). இருவரும் இன்று காலை தங்கள் சொந்த ஊரான ராமநாயக்கன் பட்டிக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்றனர். அங்கு வாக்களித்துவிட்டு தந்தை, மகன் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் மீண்டும் வத்தலக்குண்டு நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். பழைய வத்தலக்குண்டு பிரிவில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது வத்தலக்குண்டில் இருந்து தேனி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில் மீது மோதியது.  இந்த விபத்தில் சம்பவ இடத்தில் தங்கபாண்டி மோகன் ஆகியோர் பலியாகினர். சொந்த ஊருக்குச் சென்று ஜனநாயகக் கடமை ஆற்றச் சென்ற தந்தை மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close