எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்பனை செய்யும் கடைக்கு தீ வைப்பு.. சிசிடிவியில் பதிவான காட்சி

  முத்து   | Last Modified : 29 Dec, 2019 07:24 am
mysterious-people-who-set-fire-shop-selling-home-appliances

கோவை காந்திபுரம் பகுதியில் ரகுபதி என்பவரின் வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் அதிகாலையில் திடீரென தீப்பிடித்தது. இதைப் பார்த்த சிலர், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீ முழுவதும் அணைக்கப்பட்ட போதும், கடையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் மற்றும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என விற்பனைக்கு வைத்திருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதிகாலையில் மர்ம நபர் ஒருவர், கடைக்கு தீவைத்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close