பெண் கிடைக்கவில்லை.. வரதட்சணை கொடுத்து சிறுமிக்கு தாலி கட்டியவர் மாமியார் வீட்டிற்கு சென்றார்

  முத்து   | Last Modified : 29 Dec, 2019 08:26 am
old-man-married-a-17-year-minor-girl

வயது காரணமாக ஊரில் யாரும் பெண் தராமல் இருந்ததால் 17 வயது சிறுமிக்கு தாலி கட்டி மனைவியாக்க முயன்ற 37 வயது நபரை கைது செய்துள்ளது காவல்துறை.
நாமக்கல் மாவட்டம் பாராமதி வேலூர் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமன் (37) அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாகவே குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் ஜெயலட்சுமனுக்கு 37 வயதாவதால் எங்கும் பெண் கிடைக்கவில்லை. இதனால் கவலை கொண்ட அவரது தாய் நல்லம்மாள், மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் இருந்துள்ளார். 

அப்போது அவர்கள் வசிக்கும் பகுதியில் 17 வயதான சிறுமியின் தாய், தந்தையான பழனிசாமி - லதா அவர்களிடம் சென்று ' உங்களது மகளை என் மகனுக்கு திருமணம் செய்து கொடுங்கள். நாங்கள் நிறைய வரதட்சணை தருகிறோம் என்று கூறியுள்ளார். நல்லம்மாளின் கூற்றை ஆரம்பத்தில் மறுத்த சிறுமியின் பெற்றோர் பின்னர் ஒத்துக்கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. சம்பவத்தன்று ஜெயலகஷ்மன் சிறுமிக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொண்டார். இதனை அறிந்த சிலர் குழந்தை பாதுகாப்பு மையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் சட்டப்படி அந்த திருமணத்தை தடை செய்ததோடு ஜெயலட்சுமன் மற்றும் சிறுமியின் பெற்றோரை போலீசார் உதவியுடன் கைது செய்தனர். அந்நேரத்தில் ஜெயலட்சுமன் தாய் நல்லம்மாள் தப்பியுள்ளார். அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close