காவல் நிலையம் முன்பு காரில் இளம்பெண் கடத்தல்.. ஆணவ கொலைக்கு திட்டம் என புகார்

  முத்து   | Last Modified : 29 Dec, 2019 10:27 am
kanniyakumari-love-issue-girl-kidnap

கன்னியாகுமரியில் திருமணம் ஆன காதல் ஜோடியை காவல்நிலைய வாசலில் வைத்தே உறவினர்கள் தாக்கி, பெண்ணைக் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள். இவரது மகன் பியூட்டலின் வெள்ளிச்சந்தைப் பகுதியை சேர்ந்த இளம்பெண் சரண்யா ஆகியோர் மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர். காதலர்கள் இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் இருவரின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி கடந்த 23 ஆம் தேதி பியூட்டலின் தனது உறவினர்கள் முன்னிலையில் சரண்யாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து தனது மகளைக் காணவில்லை என்று சரண்யாவின் குடும்பத்தார் வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காதல் ஜோடி காவல்நிலையம் அழைத்துவரப்பட்டனர். அப்போது காவல் நிலையத்திற்கு வெளியே பதுங்கியிருந்த பெண்ணின் உறவினர்கள் இவர்களை சூழ்ந்துகொண்டு பியூட்டலினை சரமாரியாக தாக்கியதோடு சரண்யாவை அருகிலிருந்த காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாக தெரிகிறது. இதில் காயமடைந்த பியூட்டலின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தனது மருமகளை அவரது உறவினர்கள் ஆணவக் கொலை செய்ய வாய்ப்புள்ளதாக பியூட்டலின் தாயார் தாசம்மாள் அச்சம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close