மகளைக் கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்திய தாய்! போக்சோ சட்டத்தில் கைதான அதிர்ச்சி!

  முத்து   | Last Modified : 31 Dec, 2019 01:08 pm
mother-tortured-girl-who-opposed-get-married

சேலத்தில் 10ஆம் வகுப்பு மாணவியை துன்புறுத்திய தாய் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்திருந்த உறவினரான தினேஷ் ரூபன் என்பவர் மாணவியை திருமணம் செய்து கொள்ள அவரது குடும்பத்தினரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு மாணவியும் அவரது தந்தையும் எதிர்ப்பு தெரிவித்த போதும் தாய் சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே மகளை சம்மதிக்க வைத்து திருமணம் முடிக்க மாணவியின் தாயாரிடம் ரூபன் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். தங்கள் முடிவில் தந்தை, மகள் உறுதியாக இருந்தனர்.

எனினும் திருமணம் செய்துக் கொள்ள மாணவியின் கைகால்களில் சூடு வைத்து தாய் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை சேலம் மாநகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 10ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்ய வற்புறுத்திய தாயையும், இளைஞர் தினேஷ் ரூபனையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close