ஷேர் ஆட்டோவில் இளம்பெண்ணை பலாத்கார முயற்சி! காப்பாற்ற சென்றவர் உயிரிழந்த சோகம்!

  முத்து   | Last Modified : 31 Dec, 2019 12:46 pm
injured-while-rescuing-woman-man-dies

திருவள்ளூர் செம்பரப்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த 29 வயது நிரம்பிய ஒரு பெண்ணை  ஷேர் ஆட்டோ ஒன்று வழி மறித்துள்ளது. தான் இருக்கும் இடத்திற்கு செல்ல ஆட்டோவில் ஏறியுள்ளார். அதில் ஓட்டுநர் தவிர்த்து மேலும் இருவர் இருந்துள்ளனர். அவர்கள் பயணிகள் என்று அந்த பெண் எண்ணியுள்ளார். பின்னர் அவர்கள் சதியை அறிந்த அந்த பெண் ஆட்டோவை நிறுத்துமாறு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்த நபர்கள் அப்பெண்ணை மிரட்டியுள்ளனர்.

இதற்கிடையே அந்த ஆட்டோ, கடம்பத்தூர் அருகேயுள்ள கொண்டஞ்சேரி கிராமத்தை சென்றடைந்தது. கிட்டத்தட்ட 13 கிமீ கடந்து விட்ட நிலையில் உதவிக்காக அப்பெண் கூச்சலிட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற 5 இளைஞர்கள் ஷேர் ஆட்டோவை துரத்தியுள்ளனர். சிறிது தூரம் சென்றதும் ஆட்டோவில் இருந்து குதித்து அப்பெண் தப்பித்துள்ளார். ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்ததால் காயமடைந்த பெண்ணை 3 இளைஞர்கள் மீட்டு பத்திரப்படுத்த மற்ற இரு இளைஞர்கள் தொடர்ந்து ஆட்டோவை இரு சக்கர வாகனம் மூலம் துரத்தியுள்ளனர். 

ஆட்டோ மூலம் இருசக்கர வாகனத்தில் மோதியதால் நிலை குலைந்த இளைஞர்கள் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த யாகேஷ் என்ற இளைஞர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரும் தப்பித்த நிலையில் அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close