போதையால் புத்தி மாறியது.. கிழே கிடந்த செல்போனால் ஒருவர் கொலை

  முத்து   | Last Modified : 30 Dec, 2019 12:14 pm
cell-causes-death-one-man-killed-booze


குடி போதையில் கீழே கிடந்த செல்போனை எடுத்து வைத்தவரை அடித்துக் கொன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் நல்லம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் செந்தில் என்பவர் தன்னுடைய நண்பர்கள் வேல்முருகன், சதீஷ், கண்ணன் ஆகியோருடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி (48) என்பவர் மது அருந்த வந்துள்ளார். கீழே ஒரு செல்போன் இருந்ததைக் கவனித்த அவர் அதை எடுத்து தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. செந்தில் உள்ளிட்டோர் மது அருந்து முடித்துவிட்டு வெளியே செல்ல தயாரானபோது, மொபைல் போன் காணாமல் போயிருந்தது தெரிந்தது.

உடனே, நண்பர்கள் செந்திலின் மொபைல் போனுக்கு அழைப்பு மேற்கொண்டனர். அது அவர்கள் அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த முத்துசாமி பாக்கெட்டில் இருப்பது தெரிந்தது. உடனே, முத்துசாமியிடம் அவர்கள் தகராறு செய்துள்ளனர். முத்துசாமியோ, கீழே கிடந்ததை எடுத்துவைத்தேன் என்றும், திருடுவதாக இருந்தால் அதை விட்ச் ஆஃப் செய்திருக்க மாட்டானா என்றும் கேட்டுள்ளார். ஆனால், போதையிலிருந்த நால்வரும் அதனை ஏற்காமல் செல்போனை திருடுவாயா என்று கேட்டபடி முத்துசாமியை தாக்கியுள்ளனர். பலமாக தாக்கியதில் முத்துசாமி நிலைதடுமாறி தரையில் விழுந்து இறந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் சதீஷ், வேல்முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற மேலும் இருவரையும் தேடி வருகின்றனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close